ஏறு தழுவல் விழா நிகழ்ந்தது; அஞ்சுதல் அறியாத, நெஞ்சுரம் மிக்க இளைஞர் பலர் காளைகளுடன்
மோதுவதற்கும் அவற்றின்மீது பாய்ந்து தழுவுவதற்கும் வசதியான நிலையில் ஆயத்தமாய் ஆர்வமுடன் கணப்பட்டனர்.
அவிழ்த்து
விடப்பட்ட வலிய ஏறுகள் ஆக்ரோஷமாய் ஓடி அவர்களைத் தாக்கின. அப்போது:
தூசிப் படலம் எழுந்தது;
காளைகளை எதிர்கொண்டனர் இளைஞர்;
கொம்புகள் கவிழ்ந்து குத்தின;
தழுவ முயன்றோர் தோற்றுக் கலங்கினர்.
விறுவிறுப்பு மிக்க, விரைந்து நிகழ்ந்த செயல்களைக் கவிஞர், இரண்டே சீர் உடைய அடிகளால் வர்ணிக்கிறார்:
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்.
இந்த உத்தியைக் கண்ணதாசன் கையாண்டார்:
கொட்டியது மேளம்,
குவிந்தது கோடிமலர்,
கட்டினான் தாலி.
கலித்தொகை எதிரொலி கேட்கிற தல்லவா?
இதோ கம்பர்: வில்லை நாண் ஏற்றுவதற்கு
இராமன் அதன் அருகில் சென்றான்;
முழு நிகழ்ச்சியையும் நுணுக்கமாகப்
பார்த்துச் சுவைப்பதற்காக அவையோர் கண் கொட்டாமல் கவனித்தனர்.
ஆனால்! வில்லை எடுத்தது தெரிந்தது,
முறிந்த ஒலி கேட்டுவிட்டது .
" எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்"
++++++++++++++++++++++++++++++
கண்ணதாசன் பாடலோடு நல்ல விளக்கம் ஐயா...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
உங்கள் பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி .
Deleteகலித்தொகை காட்சி கண்முன் விரிகிறது. கலித்தொகை, கம்பராமாயணம், கண்ணதாசன் பாடல்வரிகள் அனைத்திலிருந்தும் இரண்டு சீர் அடிகளைக் குறிப்பிட்டுக் காட்டியமைக்கு நன்றி. ரசித்தேன்.
ReplyDeleteரசித்து மகிழ்ந்து பாராட்டியமைக்கு உளமார்ந்த நன்றி .
Delete
ReplyDeleteஎன் வலைப் பக்கம் வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி ஐயா.