Wednesday, 17 July 2013

அற்புதச் சிகிச்சை --- காட்சி 2 & 3

                                 
                                  பாத்திரங்கள் :

ஸ்கானாரேல்    -   தந்தை
லுய்சய்ந்து         -  மகள்.
லிசேத்து             -  வேலைக்காரி .
லுய்க்கிரேஸ்   - மகளின்  ஒன்றுவிட்ட  அக்கா .
அமய்ந்த்து         -  பக்கத்து  வீட்டுக்காரி .
கிய்யோம்          -  திரைச்சீலை  வணிகர் .
ழோசு                  -    நகை  வணிகர் .

அற்புதச்  சிகிச்சை  ---  தொடர்ச்சி  1   
                 
     காட்சி - 2

ஸ்கானாரேல்   -  !     இதோ     உலவுகிற   என்  மகள்.     அவள்     என்னைப்  பார்க்கவில்லை.   பெருமூச்சு   விடுகிறாள்,    வானை  நோக்கி  விழிகளை  மேலேற்றுகிறாள்.   மகளேஎன்ன  இது?    என்ன  செய்கிறது   உனக்கு  என்று    என்னிடம்  கூற    நீ  விரும்பவில்லை .   சொல்லு,      உன்  சிறிய  இதயத்தைத்    திறந்து  காட்டு.   சொல்லுசொல்லு.    உன்  அருமை  அப்பாவிடம்  உன்  எண்ணங்களைத்  தெரிவி.     மாட்டாயா?   உன்னுடைய  அறை    போதுமான  அளவு  அலங்காரமாக     இருப்பதாகத்  தோன்றவில்லையோ?...  அது  அல்ல ...  எதையாவது  கற்க  வேண்டும்  என்று  ஆசைப்படுகிறாயா? ...  அதுவுமில்லை.    யாரையாவது  விரும்புகிறாயாகல்யாணம்  செய்துகொள்ள  விருப்பமா?
(ஆம்  என்று    சைகை  காட்டுகிறாள்கவனிக்காதது  மாதிரி  வந்துவிடுகிறார்.)
                                                                  
                               -------------------------------------------------------------- 
                   

     அற்புதச்  சிகிச்சை  --  தொடர்ச்சி  2

            காட்சி - 3


லிசேத்து  மகளிடம்  பேசினீர்களேஅவளுடைய  வருத்தத்துக்குக்  காரணம்  தெரிந்ததா?

ஸ்கானாரேல்  கேடு  கெட்டவள்;   என்னை  வெறுப்பேற்றுகிறாள்.

லிசேத்து  என்னிடம்  விடுங்கள்நான்  போய்க்  கொஞ்சம்  துருவிப்  பார்க்கிறேன்.

ஸ்கானாரேல்  தேவை  இல்லை. அவள்  இப்படி  இருக்க  விரும்புவதால், அப்படியே  விட்டுவிட  வேண்டும்  என்பது  என்  கருத்து.

லிசேத்து  என்னிடம்  விடுங்கள்  என்கிறேன்;    உங்களைவிட  என்னிடம்  சுதந்தரமாக    மனம்  திறக்கக்கூடும்.
                  என்ன  அம்மாஎன்ன  உங்களுக்கு  என்பதை  எங்களிடம்  சொல்லமாட்டீர்கள்அதனால்  எங்கள்  எல்லாரையும்  வருத்தப்படுத்த  விரும்புகிறீர்களாஎன்னிடம்  சொல்லுங்கள்அப்பாவிடமிருந்து  எதையாவது  பெற  ஆசைப்படுகிறீர்களாஉங்களை  மகிழ்விப்பதற்கு  எதையும்  அவர்  தவிர்க்கமாட்டார்  என்பதைப்  பல  முறை  சொல்லி  இருக்கிறார். நீங்கள்  விரும்பக்கூடிய  முழுச்  சுதந்தரத்தையும்  அவர்  தரவில்லையாஉலாவல்களும்  அன்பளிப்புகளும்  உங்களுக்கு  ஆசை  மூட்டவில்லையாயாரிடமாவது  உங்களுக்கு  வெறுப்பு  ஏற்பட்டதா? அல்லது  யாரிடமாவது  ரகசியக்  காதல்  தோன்றி  அவரை  மணக்க  விருப்பமா! புரிந்ததுஇதுதானா  விஷயம்ஐயாமர்மம்  வெளிப்பட்டதுஅதாவது .....

ஸ்கானாரேல் -  (குறுக்கிட்டுநன்றி  கெட்ட  மகளே,    நான்  இனி  உன்னிடம்  பேச   விரும்பவில்லை;     உன்  பிடிவாதமும்  நீயுமாக  இருங்கள்.

லுய்சய்ந்து -  அப்பா,   சங்கதியை  நான்  சொல்ல  எனக்கு  அனுமதி  தர  நீங்கள்  விரும்பினால்  ...

ஸ்கானாரேல் உன்மேல்  நான்  வைத்திருந்த  பாசத்தையும்  கைவிடுகிறேன். .
லிசேத்து  ஐயாஅவர்களுடைய  துயரம் ...

ஸ்கானாரேல் கேடுகெட்டவள்என்னைச்  சாகடிக்க  விரும்புகிறாள்.

லுய்சய்ந்து -  அப்பாநான்  விரும்புவது  ...

ஸ்கானாரேல் உன்னை  எப்படியெல்லாம்  வளர்த்தேன்அதற்குக்  கைம்மாறல்ல, இது.

லிசேத்து  ஆனால்ஐயா ...

ஸ்கானாரேல் இல்லைஅவள்மேலே  நான்  பயங்கரக்  கோபத்தில்  இருக்கிறேன்.

லுய்சய்ந்து -  நான்  சொல்வது  ...

ஸ்கானாரேல் எனக்கு  உன்மேலே  பாசம்  கொஞ்சங்கூட  இனி  இல்லை.

லிசேத்து   -  அப்படி  ...

ஸ்கானாரேல் அவள்  ஒரு  ஏமாற்றுக்காரி.

லுய்சய்ந்து -  எனக்கு  ...

ஸ்கானாரேல் நன்றி  மறந்தவள்  நீ.

லிசேத்து  நீங்கள்  ...

ஸ்கானாரேல் அவளுக்கு  என்ன  கஷ்டம்  என்பதை  என்னிடம்  சொல்ல  விரும்பாத ஒரு  கேடுகெட்டவள்.

லிசேத்து  கணவனைத்தான்  விரும்பு  ...

ஸ்கானாரேல் -  ( காதில்  விழாததுபோல்  நடித்துஅவளை  நான்  கைவிடுகிறேன்.

லிசேத்து  கணவன்.

ஸ்கானாரேல் அவளை  வெறுக்கிறேன்.

லிசேத்து  கணவன்.

ஸ்கானாரேல் அவள்  என்  மகளல்ல.

லிசேத்து  - கணவன்.

ஸ்கானாரேல் அவளைப்  பற்றிப்  பேசாதே.

லிசேத்து  கணவன்.

ஸ்கானாரேல் பேசாதே  என்கிறேன்.

லிசேத்து  கணவன்கணவன்கணவன்.
                                                                                           ( தொடரும் )                       

4 comments:

  1. Replies
    1. உங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்ரி .

      Delete
  2. மகளின் உண்மையான வருத்தம் என்னவென்று அறிந்தும் தனக்கு உடன்பாடில்லாத அவ்விஷயத்தைக் கண்டுகொள்ளாதபடி பாசாங்கு செய்வதோடு மகளையும் தூற்றுகிறாரே... ஸ்கானாரேல் உண்மையில் புத்திசாலிதான். இப்படிப்பட்ட சாதுர்யமான தகப்பனிடம் எந்த மகள்தான் தன் மனத்தைத் திறக்கமுடியும்? பாவம் லுய்சய்ந்தும் அவள் உதவிக்கு வந்த லிசேத்தும்.

    அருமையான மொழிபெயர்ப்பு. சுவாரசியமான நாடகம். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்துடன் கருத்துரை வெளியிட்டமைக்கு மிகுந்த நன்றி .

      Delete