Monday, 15 July 2013

அற்புதச் சிகிச்சை - காட்சி 1

                                       
             (17 ஆம்  நூற்றாண்டுப்  பிரஞ்சு  நகைச்சுவை  நாடக  ஆசிரியர்  மொலிஏர்  இயற்றிய  ஒரு  சிறு  நாடகத்தின்  சில  காட்சிகளை  மொழிபெயர்த்து  வழங்குகிறேன். இது  மஞ்சரி  ஜூலை 2013   இதழில்  வெளிவந்தது)

                                   பாத்திரங்கள் :

ஸ்கானாரேல்   -   தந்தை
லுய்சய்ந்து       -  மகள்.
லிசேத்து          -  வேலைக்காரி.
லுய்க்கிரேஸ்   - மகளின்  ஒன்றுவிட்ட  அக்கா.
அமய்ந்த்து      -  பக்கத்து  வீட்டுக்காரி.
கிய்யோம்       -  திரைச்சீலை  வணிகர்.
ழோசு             -    நகை  வணிகர்.

                               காட்சி    1

ஸ்கானாரேல்   -   எவ்வளவு  கஷ்டமானது  இந்த  வாழ்க்கைபழங்  காலத்  தத்துவ  அறிஞர்  சொன்னது  போலசொத்து  இருந்தால்  சண்டை  உண்டுஒரு  துன்பம்  வருவதில்லை  அடுத்தது  வராமல். எனக்கு  ஒரேயொரு  மனைவி  இருந்தாள்அவள்  இறந்துவிட்டாள்.

கிய்யோம்    -  எத்தனை  மனைவி  வேண்டுமென்று   விரும்புகிறீர்கள்?

ஸ்கானாரேல்  -  அவள்  இறந்துவிட்டாள்நண்பரே.     இந்த  இழப்பு    என்  உணர்ச்சியுடன்   தொடர்பு  உடையது;    இதை    நான்  நினைவுகூர  முடிவதில்லை,   அழாமல்.   அவளது  நடத்தை  பற்றி  அதிக  மனநிறைவு  எனக்கு    இருந்ததில்லை;    ஆனால்  சாவு    எல்லாவற்றையும்  சரி செய்துவிடுகிறது .  அவள்  செத்துவிட்டாள்அவளுக்காக  அழுகிறேன்; அவள்  உயிரோடு  இருந்திருந்தால்நாங்கள்  சண்டை  போட்டுக்கொண்டு  இருந்திருப்போம்கடவுள்  எனக்கு  அளித்த  குழந்தைகளுள்  ஒரு  பெண்ணை  மட்டுமே  விட்டுவைத்தார்;   அந்த  மகளால்  எனக்குச்   சங்கடங்கள்ஏனென்றால்உலகின்  மிக  ஆழ்ந்த  துன்பத்தில்பயங்கர  சோகத்தில்  அவளை  நான்  காண்கிறேன்அதிலிருந்து  அவளை  மீட்க  வழி  காணோம்அதன்  காரணங்களை  என்னால்  அறிய  முடியவில்லைஅதனால்  செய்வது  அறியாமல்  திகைக்கிறேன்ஒரு  நல்ல  யோசனை  தேவைப்படுகிறது.   நான்  என்ன   செய்ய  வேண்டும்  என்று  சொல்லும்படி     உங்கள்  எல்லாரையும்  வேண்டுகிறேன்.

ழோசு  -  என்னைப்  பொருத்தவரை,    ஆடையும்  நகையும்  தான்    இளம்  பெண்களை  அதிகம்  மகிழ்விப்பவை   என்பது  உறுதி;   நான்  நீங்களாக  இருந்தால்,    அவளுக்கு  வாங்கித்  தருவேன்,   அதுவும்  இன்றைக்கேஅழகான  வைர  அல்லது    மாணிக்க  அல்லது  மரகத  அட்டிகை.

கிய்யோம்    -  நானோ,    உங்கள்  இடத்தில்  நான்  இருந்தால்மனித  உருவங்கள்  பொறித்த,   எழில்  மிக்க    திரைச்சீலை  ஒன்றை  வாங்கிக்  கொடுப்பேன்அவளது  அறையில்  தொங்கவிட்டால்,    அவளுடைய  கண்ணுக்கும்  மனத்துக்கும்  அது  விருந்தாகும்.

அமய்ந்த்து  -   கொஞ்ச  காலத்துக்கு  முன்பு    அவளைப்  பெண்கேட்ட    அந்த  இளைஞருக்கு    அவளை  மணம்  முடிக்க  வேண்டும்,      எவ்வளவு  முடியுமோ    அவ்வளவு  விரைவில்.

 லுய்க்ரேஸ்  - உங்கள்  மகள்    திருமணத்துக்குச்    சிறிதும்  தயாரில்லை    என  உறுதியாகச்  சொல்கிறேன்.    உலகம்  அவளுக்கு    ஒத்து  வராது;   அவளை  ஒரு  மடத்தில்  சேர்க்கும்படி  யோசனை  சொல்கிறேன்:     அங்கு  அவளது  குணத்திற்கு ஏற்ற  சூழ்நிலையைக்  காண்பாள்.

ஸ்கானாரேல் இந்த  எல்லா  யோசனைகளும்    நிச்சயமாக    அற்புதமானவைஆனால்    அவை  சிறிது  தன்னலம்  சார்ந்தவை    என்று  நினைக்கிறேன்நீங்கள்    எனக்கு  யோசனை  கூறுவது    உங்கள்  நன்மைக்காகவே   என்பதைப்  புரிந்துகொள்கிறேன்.  

நீங்கள்  நகைக்  கடைக்காரர்,   ழோசுஉங்கள்  புத்திமதியில்    தன்  சரக்கைத்  தள்ளிவிட    ஆவல்  கொண்டுள்ள    ஒரு  மனிதரின்    வாடை  வீசுகிறது.    கிய்யோம்,     நீங்கள்  திரைச்சீலை  விற்பவர்;   உங்களைச்  சங்கடப்படுத்துகிற  சீலை  எதையோ    வைத்திருப்பது  போலத்  தோன்றுகிறீர்கள்.    அமைந்த்து,    உங்கள்  காதலனுக்கு     என்  மகள்மீது  நாட்டம்  இருப்பதாகச்    சொல்லப்படுகிறது;   ஆகையால்    அவள்  வேறு  ஒருவனின்  மனைவி  ஆவதில்    உங்களுக்கு  வருத்தம் இருக்காது.   அருமை லுய்க்ரேஸ்,    அவளைத்  துறவி  ஆக்க    நீ  சொன்ன  அறிவுரை,     என்  சொத்துக்கு  வாரிசு  ஆக  விரும்புகிற  ஒரு  பெண்ணின்  தந்திரமே. 
ஆகையால்அன்பர்களே,   உங்கள்  யோசனைகளுள்    ஒன்றைக்கூட  நான்  ஏற்கமாட்டேன்.   

(தொடரும்  )

4 comments:

  1. சுவாரஸ்யம்... தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்தும் கருத்து சொல்லியும் ஊக்குவிக்கிற உங்களுக்கு அகமார்ந்த நன்றி .

      Delete
  2. ஸ்கானாரேல் புத்திசாலி. தன் மகளின் பிரச்சனை என்னவென்று அறியாதபோதும், மற்றவர்களின் ஆலோசனைகளுக்குப் பின்னாலிருக்கும் ஆதாயத்தை அறிந்துகொண்டுவிட்டார். சரி, உண்மையில் அவர் மகளின் மனவருத்தத்துக்குக் காரணம் என்ன? கண்டுபிடித்தாரா? தொடர்ந்து வருகிறேன்.

    மஞ்சரியில் இப்படைப்பு வெளியானமைக்குப் பாராட்டுகள் தங்களுக்கு.

    ReplyDelete
  3. தொடர்ந்து வாசித்து விமர்சிப்பதற்கு மனமார்ந்த நன்றி .

    ReplyDelete