Monday 26 August 2013

யார் கட்டிவிட்ட கதைகள்?


இந்துக் கடவுள்களை இழித்தும் பழித்தும் கதைகள் புனையப்பட்டுள்ளன என்பதைப் பலரும் அறிவர். அவற்றை இயற்றியோர் எந்த மதத்தினர்?



வேறு சமயத்தார் அல்லஇந்துக்களேதான்! நீங்கள் நினைக்கலாம்,  "என்ன வியப்பு! தங்கள் தெய்வங்களைத் தாங்களே களங்கப்படுத்திக் கொள்வார்களோ?    நம்ப முடியவில்லை என்று;    ஆனால் உண்மை அதுதான்.

இந்து மதம்,   பிற சமயங்களைப் போல,    ஒரு மறைநூலை  (விவிலியம்குரான்) அடிப்படையாய்க் கொண்டதல்ல.  முற்கால இந்தியாவில்சமணம் பவுத்தம் அல்லாத ஆறு  வைதிக  சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன:

1  -  சிவனியம் (சைவ  சமயம்)  -  சிவன்  கடவுள்;
2  - வைணவம்  -   திருமால்  தெய்வம்;
3  -  சாக்தம்  -  அம்மன்  வழிபாடு;
4  -  கெளமாரம்  -  குமாரன்  (முருகன்)  கடவுள்;
5 -  காணாபத்யம் -  கணபதி போற்றல்;
6 -  செளரம்  -  சூரியன்  தெய்வம்.

  இறுதி  இரண்டும் வடக்கில்  பரவியிருந்தவை. முன்னது மகாராட்டிரத்திலிருந்து 7 ஆம்  நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்தது;    மற்றது ஒடிசாவில் ஆதிக்கம் பெற்றிருக்கலாம்,    சூரியன் கோவில் அங்கிருக்கிறது.

  மேற்கண்ட ஆறு மதத்தாரும் தத்தம் கடவுள்களை உயர்த்தியும் பிற தெய்வங்களைத் தாழ்த்தியும் கதை எழுதினார்கள்.

  1  -  சிவனே முழுமுதற் கடவுள். வானத்திலிருந்து பிரவாகமாய்ப் பொங்கிப்   பெருக்கெடுத்து பூமியின்மீது பாய்ந்த கங்கையைத் தம் சடையினால் தாங்கி    வெள்ளப் பேரழிவிலிருந்து உலகத்தைக் காத்தவர்.  ஆலகால நஞ்சை உண்டு தேவர்களைக் காப்பாற்றியவரும் அவரே.
திரிபுரத்தைத் தாக்கப் போனபோது அவரது அம்பாய்ப் பயன்பட்டவர் திருமால்;    அவரது அடியையும் முடியையும் காண்பதற்குச் சென்ற திருமாலும் பிரம்மனும் எவ்வளவோ முயன்றும் முடியாமல் தோற்றுத்   திரும்பினர்.

  சிவனின் பெருமையைப் பறை சாற்றும் நூல்கள் பெரிய புராணம்தேவாரம்திருவாசகம் முதலியன.

 2   --  திருமாலே பெரிய  கடவுள். அவரது காலில்  உற்பத்தி ஆகிற கங்கை   சிவனின் தலைமேல் இருக்கிறாள்.  பஸ்மாசுரனுக்கு அஞ்சி ஓடிய சிவனைத்  திருமால்தான்,   மோகினி வடிவில் போய்,    அசுரனை அழித்துச்    சிவனைக் காப்பாற்றினார்.

  வைணவ நூல்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்திருப்பாவை.

   3  -    காளிமாரிதுர்க்கைபராசக்திபைரவிசாமுண்டி  என  அம்மனுக்குப் பல பெயர்  உண்டு.  சமயபுரம்மேல்மருவத்தூர்மதுரைகாஞ்சிகன்னியாகுமரி முதலானவை சக்தி பீடங்கள்.  வங்காளத்தில் துர்கா பூஜை ஒரு பெரிய விழா.

    சக்தி இல்லாமல் சிவனில்லை என்பது சாக்தத்தின் முழக்கம். சக்தியைவிடச் சிவன் பெரியவர் என்பதற்குச் சிவனியர் சொல்லும் கதை காலைத் தூக்கி ஆடிய சிவனைப் போல் ஆட முடியாமல்,    போட்டியில் காளி தோற்றாள் என்பது. பார்வதியின் அழுக்கிலிருந்து உருவானவர் கணபதி என்று அவரை மட்டம் தட்டுகிறது சாக்தம்.


    சக்தியைத் துதிக்கும் நூல்: அபிராமி அந்தாதி.

  4  --  சிவனைக் கீழே பணிவுடன் அமரச் செய்து தாம் மேலே இருந்து உபதேசம் செய்தவர் முருகன்சிவனுக்கே குருவாய் விளங்கியதால்,    தகப்பன்சாமி,    குருசாமி,    குருபரன்,    குருநாதன் என்றெல்லாம் துதிக்கப்படுகிறார் முருகன்.  

அவரைப் போற்றும் நூல்கள் திருமுருகாற்றுப்படை,    திருப்புகழ்,   கந்தர் அனுபூதி,    கந்தர் அலங்காரம், சேயூர் முருகன் உலா,    திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்  முதலியன.

  5  -- எல்லாத் தெய்வங்களுக்கும் முந்தித் தொழவேண்டிய பெருமை உடையவர் கணபதி என்பது இம்மதத்தாரின் வாதம். முருகனைத் தோற்கடித்துப் பழத்தைப் பெற்ற கணபதி அவரைவிட அறிவாளிஅவர் வள்ளியை வசப்படுத்த யானை வடிவில் வந்து உதவியவர்.

  விநாயகர் அகவல் என்னும் நூல் பிள்ளையார்மீது பாடப்பட்டது.

  6  -  சூரிய நமஸ்காரம் இச்சமயத்தாரின் கண்டுபிடிப்பு.

  8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் ஆறு மதங்களையும் ஒன்றாக்கினார். ஆதலால் அவர், " ஷண்மத ஸ்தாபகர் எனப்படுகிறார். (ஷண்மதம் =  ஆறு மதம்;    ஷண்முகம் =  ஆறுமுகம்.) காலப்போக்கில் வைணவம் தனியாகவும் மற்ற ஐந்தும் சிவனியமாகவும் பிரிந்தனஇன்று   இந்த இரண்டு சமயங்களே பின்பற்றப்படுகின்றன.


                                  ++++++++++++++++++++++
(படத்துக்கு நன்றி: கூகுள்)

3 comments:


  1. ஐயா வணக்கம். யார் கட்டிவிட்டக் கதைகளாயிருந்தால்தான் என்ன. நம் மக்கள் பெரும்பாலும் கதைகளின் சாராம்சத்தை விட்டு விட்டு, சக்கையை மாட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளுக்கு அவரவர் விருப்பத்துக் கேற்ப கதைகள் கட்டிஉண்மை நிலை தெரியாவண்ணம் செய்யப் பட்டிருக்கிறது.பல பக்தி இலக்கியங்கள் தமிழின் வீச்சை அழகாக வெளிக் கொணர்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் . கருத்துக்கு மிக்க நன்றி .

      Delete