Tuesday, 22 October 2013

திருக்குறளின் காலம்ங்க காலம் எனப்படுவது பொ.யு.மு. 2-ஆம் நூற்றாண்டு முதல் பொ.யு. 2-ஆம் நூற்றாண்டுவரை உள்ள 400 ஆண்டுகள் என உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்போது இயற்றப்பட்ட  நூல்கள் என்று பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவற்றுள் சில பிற்காலத்தவை என்பதை ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளனர். (பத்துப் பாட்டில் திருமுருகாற்றுப்படைஎட்டுத் தொகையுள் கலித்தொகைபரிபாடல்ஐங்குறு  நூறு). இருந்தாலும் அவை யாவும் சங்க நூல்கள் என்னும் பழக்கம் நீடிக்கிறது.

அவற்றுள் திருக்குறள் இல்லை;   இதுவும் நாலடியார் முதலான வேறு நூல்களும் (மொத்தம் 18)  பதினெண் கீழ்க் கணக்கு எனப் பெயர் சூட்டப்பட்டுசங்கம் மருவிய நூல்கள் எனப்படுகின்றன;   அதாவது சங்க காலத்தை  அடுத்துத் தோன்றியவை.

திருக்குறள் குறித்து விநாசிலிங்கம் செல்வநாயகம் (1907 - 1973),   என்ற இலங்கைத் தமிழர்,  தம் "தமிழ் இலக்கிய வரலாறு" நூலில் என்ன எழுதியுள்ளார் என்பதை வாசிப்போம்:

"மீன்இறைச்சிகள் முதலியவற்றை மக்கள் விரும்பி உண்ட காலம் சங்க காலம்;    அவற்றைக் கடியும் திருக்குறள் சங்க காலத்துக்குப் பிற்பட்டது.
சங்கச் செய்யுள்களில்,   உயர்திணையில் வராத "கள்"  விகுதியும் "எல்லாம்"  என்னும் சொல்லும் குறளில் உள. அவற்றில் வாரா ஆநின்றுமாட்டு (உருபு)கால் (விகுதி)விடு (துணைவினை), கில் (இடைச்சொல்)வட சொற்கள் இதில் உண்டு.”

(என் குறிப்பு: சங்கப் பாக்களில் யானைகள்மரங்கள் எனவும் காடுகள் எல்லாம்எல்லா ஊர்களும் எனவும் அஃறிணையில் மட்டுமே அந்த இரு சொற்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. திருக்குறளிலோ மற்றையவர்கள் (பா 283) ,   இரப்பாரை எல்லாம் (1067)   என உயர்திணையிலும் அவை வருகின்றன.

சில காட்டுகள்: மாட்டு (1110),   குன்றிக்கால் (140),    சாகிற்பின் (780 ) - சா-கில்-பின்.

சில வடசொற்கள்:  பாவி (168), தவம் (262),  நாமம் (360),  நாகம் (763).


**************************************************


                                                

6 comments:

 1. அறிந்தேன் ஐயா... நன்றி...

  தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . நீங்கள் முன்பு தெரிவித்திருந்த http://dinduguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html என்னால் திறக்க முடியவில்லை .

   Delete
 2. ஐயா வணக்கம். எனக்கு வெகுநாட்களாகவே ஒரு சந்தேகம் பண்டைக் காலத்தில் எழுதப் பட்ட(?) இலக்கிய நூல்கள் அநேகமாக பனை ஓலையில் செதுக்கப் பட்டிருக்கவேண்டும். இல்லை வாய் வழியே தொடர்ந்திருக்க வேண்டும் கல் வெட்டுகளிலும் உலோகப் பட்டையங்களிலும் எழுத்ப் ( செதுக்கப்) பட்டிருந்ததா?புராதன கட்டிடங்களின் காலம் கல்வெட்டுக்கள் மூலமும் உலோகப் பட்டயங்கள் மூலமும் கணக்கிடப் படுகிறதாக அறிகிறேன் சில மியூசியங்களில் பாதுகாக்கப் பட்டு வரும் சுவடிகளின் காலம் ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்டதாக இருக்கிறதா? இம்மாதிரி சந்தேகங்களினால் இலக்கியங்கள் வாய்வழியே தொடர்ந்து வந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கலாம் என்றும் அவற்றின் மூலம் மிகவும் சிதைந்து நிறையவே இடைச் செருகல்கள் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. தெளிவு செய்வீர்களா? நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . உங்களின் அய்யம் அறிந்தேன் . இலக்கிய நூல்கள் எல்லாம் பனை ஓலைச் சுவடிகளில் மட்டுமே எழுதப்பட்டன. அவற்றை வைத்துக்கொண்டு ஆசிரியர் மூலம் ,, அர்த்தம் முதலியவற்றைக் காதால் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள் . இதற்குப் பாடம் கேட்டல் என்று பெயர் . பின்பு சுவடிகளில் உள்ளதை மனப்பாடம் செய்தார்கள் . ஒரு சுவடியிலிருப்பதை வேறு சுவடிகளில் எழுதிக்கொள்வார்கள் ( காப்பி எடுத்தல் ) ஆகவே பாடம் மாறாது . சிலர் மட்டும் தங்கள் சரக்கைப் பழைய சுவடியில் ஏற்றிவிடுவார்கள் ; ஆனால் அது தெரிந்துவிடும் . ஏனென்றால் பெரும்பாலான சுவடிகளில் ஒரிஜினல் மாத்திரம் தான் இருக்கும் . அரசர்கள் தங்கள் ஆணைகளைக் கல்வெட்டிலோ செப்புப் பட்டயங்களிலோ செதுக்கச் செய்வார்கள் . இவற்றை அடிப்படையாய்க் கொண்டுதான் சில வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம் .

   Delete
 3. திருக்குறள் எழுந்த காலப் பின்னணி பற்றி கூறவும்

  ReplyDelete
 4. திருக்குறள் எழுந்த காலப் பின்னணி பற்றி கூறவும்

  ReplyDelete