தமிழில் சில சொற்கள் காலப் போக்கில்
தம் உருவத்தில் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றை மருச் சொற்கள் என்கிறோம். கீழ்க்
காணும் பட்டியல் அவற்றுள் சிலவற்றை எடுத்துக்காட்டும்:
நேயம் - நேசம்.
தொகுப்பு - தோப்பு.
பண்டி - வண்டி.
வாயில் - வாசல்.
இரும்பொன் - இரும்பு.
அரிக்கும் சட்டி - அரிக்கன்சட்டி.
பெருமகன் என்னும் ஆண்பாற் சொல்
பெருமான் எனவும் பெருமகள் என்ற பெண்பாற் சொல் பெருமாள் எனவும் சுருங்கின; இந்த வார்த்தை பிற்காலத்தில் ஆணாகிய
திருமாலைச் சுட்டவே, பெண்பாலுக்கு வேறு சொல் படைத்தனர்: அது பெருமாட்டி.
காலப் போக்கில், பெருமான், பிரான் ஆயிற்று; பெருமாட்டி, பிராட்டி ஆகியது.
பெருமகன் - பெருமான் - பிரான்.
பெருமகள் - பெருமாட்டி - பிராட்டி.
++++++++++++++++++++++
வணக்கம்
ReplyDeleteஐயா
விளக்கம் அருமை மேலும் தொடர....எனது வாழ்த்துக்கள் .....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . மேலும் தொடர முயல்வேன் .
Deleteஅருமையான விளக்கங்கள் ஐயா.
ReplyDeleteமூலச் சொற்களைத்தெரிந்து கொள்வதில் தனி மகிழ்ச்சியே ஏற்படுகிறது ஐயா.
தொடருங்கள். நன்றி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . தொடர முயல்வேன் .
Deleteநல்ல விளக்கம் ஐயா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் நன்றிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .
Deleteமருச்சொற்கள் பற்றி அறிந்துகொண்டேன். இரும்பொன் இரும்பானதும், பண்டி வண்டியானதும் புதிய தகவல்கள். பிரான், பிராட்டியின் மூலச்சொற்கள் அறிந்து வியந்தேன். மிக்க நன்றி தங்களுக்கு.
ReplyDeleteகீத மஞ்சரியின் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteகோயில் அல்லது கோவில்------ நாகஸ்வரம் அல்லது நாதஸ்வரம்....... விநாயகர் அல்லது வினாயகர் .......பத்திரிக்கை அல்லது பத்திரிகை...... அதேபோல் எழுத்துக்கள் அல்லது எழுத்துகள் ...வாழ்த்துக்கள் அல்லது வாழ்த்துகள் இவையெல்லாம் எனக்கு இருக்கும் சந்தேகங்கள். தெளிவித்தால் கடமைப் பட்டிருப்பேன். நன்றி.
ReplyDeleteஐயங்கள் கேட்டமைக்கு மிக்க நன்றி . கோவில் என்பதுதான் இலக்கண விதிப்படி அமைந்த சொல் ; ஆனால் காலப் போக்கில் " கோயில் " எனத் தமிழறிஞர்களே எழுதவே , இந்தச் சொல்லையும் " இலக்கணப்போலி " என்று பெயர் தந்து இலக்கண நூல் ஏற்றுக்கொண்டது . ஆகையால் இரு விதமாகவும் எழுதலாம் . -- நாதம் என்பது " இனிய ஒலி " ; அதை வழங்குகிற கருவி " நாதஸ்வரம் "; இது மருவி " நாகஸ்வரம் " ஆகிவிட்டது ; இந்தச் சொல்லையும் அறிஞர் பயன்படுத்துகின்றனர் . -- விநாயகன் என்பது வடமொழி ; தலைவன் என்று அர்த்தம் . வி - நாயகன் என்றால் தனக்கு மேல் வேறு தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது எல்லாக் கடவுள்களுக்கும் மேலான் கடவுள் . வினாயகன் என எழுதுவது பிழை . பத்ரிக்கா என்ற சமற்கிருதச் சொல் " தாள் " எனப் பொருள்படும் . அதைத் தமிழில் இரண்டு விதமாகவும் எழுதலாம் . -- எழுத்துக்கள் , வாழ்த்துக்கள் , கருத்துக்கள் எனவும் எழுத்துகள் , வாழ்த்துகள் , கருத்துகள் எனவும் அறிஞர்கள் இரு விதமாக எழுதுகிறார்கள் . " க் " இல்லாமல் எழுதினால் ஓர் எழுத்து மிச்சம் .
Delete