Wednesday 13 November 2013

கைகேயி



  இராமனுக்கு முடி சூட்டுவதற்கான எல்லா வித ஏற்பாடுகளும் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாரா வகையில்ஒரு திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தியவள் கைகேயிஅவளைத் தூண்டியவள் அவளது ஊழியள் மந்தரை. ஆகையால்எல்லாரும் கருதிக்கொண்டிருப்பதுகைகேயி மிகப் பொல்லாதவள்சூழ்ச்சிக்காரிகணவர்மீது இரக்கங் காட்டாமல் அவர் உயிர் இழக்கக் காரணமான பாதகி என்பது. கம்பர், அவளைத் தீயவை யாவையினும் சிறந்த தீயாள்” எனப் பழித்தார்அவளுக்குத் துர்ப்போதனை செய்து, மனத்தை மாற்றிக் கெடுத்த மந்தரை யென்ற கூனியை அவர்,  “கொடுமனக் கூனி”  என்று தூற்றினார்.

  ஆனால்மாறுபட்ட கருத்து உடைய தமிழறிஞர் ச. சோமசுந்தர பாரதியார்தம் கருத்தை விளக்கி, “தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்” என்னுந் தலைப்பில் ஒரு நூல் இயற்றி இருக்கிறார். நூலின் உள்ளடக்கத்தைத் தலைப்பே வெளிப்படுத்துகிறது. 

 தசரதனிடத்தில் ஒரு குறை உண்டாயிற்றுஅதை நீக்கி நிறை செய்தவள் கைகேயி என்பது அவருடைய ஆராய்ச்சி முடிவு.

  கேகய மன்னனிடம் தசரதன் சென்றுஅவனது மகளாகிய கைகேயியைத்  தனக்கு மணம் முடித்துத் தரும்படி கேட்டபோதுஅவன் மறுத்தான்; அவன்  சொன்ன காரணம்:

  “முன்பே திருமணம் ஆன உனக்கு என் மகளைத் தந்தால்இவளுக்குப் பிறக்கும் மகன்ஆட்சி  உரிமை பெறமுடியாதுமூத்த மனைவியின் புதல்வனே மன்னன் ஆவான்எனவேஒரு பிரம்மச்சாரி வேந்தனுக்குக்  கைகேயியை மனைவியாக்கிஎன் பேரன் அரசன் ஆவதற்கு வழி வகுக்கத்தான் நான் விரும்புகிறேன்”.

 அப்போது தசரதன்கைகேயியின் மகனுக்குத் தனது நாட்டை ஆளும்  உரிமையைத் தருவதாக வாக்களித்து அவளை மணந்தான்.

 பின்பு,  இராமனிடம் கொண்ட அதிகப் பாசத்தால்னுக்கு முடி சூட்ட  விரும்பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்;  பரதனுக்குத்தான் உரிமை என்ற எண்ணம் அவன் மனத்தில் உறுத்திக்கொண்டிருந்தது. ஆதலால், விழாவின்போது, பரதன் அங்கிருப்பது நல்லதல்ல என முடிவு செய்து, அவனைக் கேகய நாட்டுக்கு அனுப்பினான்.

 இராமனைத் தன் மகன்போலவே கருதி இருந்த கைகேயி, அவன்  அரியணை ஏறுவது குறித்து மகிழ்ச்சிதான் அடைந்தாள்தசரதனின் வாக்குறுதியை அறிந்திருந்த மந்தரைதக்க சமயத்தில் அதைக் கைகேயிக்கு நினைவூட்டவே, தன் கணவன் வாக்குத் தவறினான் என்ற அவப்பேர் வாங்காமல் தடுத்தாள் என சோமசுந்தர பாரதியார் விளக்கினார்.

 வால்மீகி ராமாயணத்தை ஆய்ந்து கண்ட  முடிவு இது.


    ==========================================

படம் உதவி: இணையம்

3 comments:

  1. கைகேயி இல்லாவிட்டால் இராமாயணம் ஏது?
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கம் தருகிறது ; என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. காவியங்களில் கதை நகர்த்தும் பணி சிலருக்கு கொடுக்கப் படுகிறது. ராமாயணத்தில் கூனிக்கு ஒரு பங்கு உண்டு. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete