Monday, 23 November 2015

பாரதிதாசன்

பாரதிதாசன் (1891 - 1964)

   கவிஞர்  பாரதிதாசனின்  இயற்பெயர்  கனக. சுப்புரெத்தினம்புதுச்சேரியில்  தோன்றியவர். தமிழகத்துக்கு  ஒரு பாரதியார்புதுச்சேரி மாநிலத்துக்கு  ஒரு  பாரதிதாசன்.

   சுப்பிரமணிய  பாரதியார் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்குத்  தப்பி  சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்து பத்தாண்டுக் காலம் (1908-1918) வாழ்ந்தார்.

   அரசு  பள்ளிகளில் தமிழாசிரியராய்ப்  பணியாற்றிய சுப்புரெத்தினம், 1908 இல், வேணு  நாய்க்கர் என்பாரது இல்லத்தில் நிகழ்ந்த  திருமணத்தின்போதுபாரதியாருக்கு  அறிமுகமானார். இருவர்க்கும்  நெருக்கம்  உண்டாயிற்று.

   பாரதியாரைப் பெரிதும் மதித்த சுப்புரெத்தினம்அவர்மீது தாம்  கொண்ட பக்தியின் அடையாளமாய்த் தம் பெயரைப் பாரதிதாசன் என  மாற்றிக்கொண்டார்அவர் தந்த  ஊக்கம்  இவரைக் கவிஞராக்கியதுபக்திப் பாடல்கள்  புனைந்தார் , பாரதியாரின்  பாராட்டைப்  பெற்றார்

   1 --  மயிலம்  ஶ்ரீ  ஷண்முகன் வண்ணப்  பாட்டு.
   2 --  மயிலம் ஶ்ரீ  சிவஷண்முகக்  கடவுள்  பஞ்சரத்நம்.
   3 -- மயிலம்  ஶ்ரீ  சுப்பிரமணியர் துதியமுது.

ஆகியவை  அவருடைய  முதல்  நூல்கள்.

 ( மயிலம்  என்பது புதுச்சேரிக்கு அருகில்  உள்ள  தமிழ்நாட்டு  ஊர்).

   பாரதியார், 1928 இல், சென்னைக்குப்  போய்விட்ட  பின்புபாரதிதாசன்  பெரியாரின்  தொண்டராகித் தன்மானம், பகுத்தறிவு, நாத்திகம் முதலிய  முற்போக்குக்  கொள்கைகளைக்  கடைப்பிடித்து அவை  குறித்துத்  தீவிரமான  கவிதைகள்  இயற்றிப் "புரட்சிக் கவிஞர்" எனப்  போற்றப்பட்டார்கலப்புத்  தமிழை முதலில்  பயன்படுத்தியவர் பிற்பாடு  தனித்தமிழ்ப்  பற்றாளர் ஆகிப்  பிறமொழிச்  சொல்  கலவாமல்  பாடினார்.

   ஆயிரந்தலை  வாங்கிய  அபூர்வ  சிந்தாமணி, பொன்முடி முதலான  சில  படங்களுக்குப்  பாட்டும்  உரையாடலும்  எழுதினார்அபூர்வ  சிந்தாமணியின், "அன்னம்  நடை பயில  ஆயிழை  வராததினால்என்னும்  பாடல் இலக்கிய நயமுடையதுஅவரது  பல  பாடல்கள்  படங்களில் இடம்  பெற்றன:

   1 ---ஆலையின்  சங்கே
   2 --ஆடற்  கலைக்  கழகு
   3 --துன்பம் நேர்கையில்
   4 --வெண்ணிலாவும்  வானும்  போல 
   5 --தமிழுக்கும் அமுதென்று பேர்
   6 --வளமார் எமது  திராவிட நாடு
   7  --சங்கே  முழங்கு

   திராவிடர்  கழகத்திலிருந்து தி.மு.. பிரிந்தபோது பெரியாரின்  ஆதரவாளராய்  நீடித்தார்.

  பாரதியாரைப்  புகழ்ந்து  பலபல  கவிகளை  இயற்றியுள்ள  பாரதிதாசன்  1946 இல்  திருச்சி  வானொலியில் நிகழ்ந்த  கவியரங்கில்  நீண்டதொரு  பாவில்  அவரைப்  போற்றிப்  பாடினார்அதில்  சில  அடிகள்:

   பைந்தமிழ்த்  தேர்ப்பாகன்  அவனொரு
  செந்தமிழ்த்  தேனீ  சிந்துக்குத்  தந்தை
  நீடுதுயில்  நீக்கப்  பாடிவந்த நிலா
  காடுகமழும்  கர்ப்பூரச்  சொற்கோ.

 இறுதிக்காலம் வரை பார்ப்பன  எதிர்ப்பில் மும்முரங்  காட்டிய  பாரதிதாசன்  அந்தச் சாதி பாரதியாரின்மீது வைத்த மதிப்பை எள்ளளவுங்  குறைக்கவில்லை.

  புதுச்சேரி மாநில அரசு நிகழ்ச்சிகளில் பாரதிதாசனின், "வாழ்வினில் செம்மையைச்  செய்பவள்  நீயேஎன்ற  பாட்டு  தமிழ்த் தாய் வாழ்த்தாகப்  பாடப்படுகிறது.


  +++++++++++++++++++
படம் உதவி : இணையம்6 comments:

 1. வணக்கம்
  ஐயா
  பாரதி தசான் பற்றி சிறப்பான குறிப்பு தந்தமைக்கு நன்றி ஐயா. படித்து மகிழ்ந்தேன் த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு ஐயா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வழக்கம்போல் பாராட்டியதற்கு என் உள்ளங் கனிந்த நன்றி .

   Delete
 3. சிறப்பு எனப் பாராட்டியதற்கும் வாக்குக்கும் என் மனமுவந்த நன்றி .

  ReplyDelete
 4. புரட்சிக்கவிஞர் துவக்கத்தில் மயிலம் கடவுள்கள் பற்றிப் பக்திப்பாடல்கள் புனைந்திருக்கிறார் என்பது இதுவரை நான் அறியாத செய்தி. புதுவையின் மண்ணின் மைந்தர் பாரதிதாசன் பற்றி அறிந்து கொள்ள உதவிய இப்பதிவுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 5. பாரதிதாசன் பற்றிப் புதியன அறிய என் கட்டுரை பயன்ன்பட்டதறிய மகிழ்ச்சி ; பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete