Thursday 26 March 2020

கொரோனா






  Corona Virus Disease என்பது COVID  எனச் சுருக்கமாகச் சுட்டப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத அவ்வளவு நுண்ணிய உயிரி ஒன்று என்ன பாடு படுத்துகிறது உலகம் முழுவதையும்! “உருவுகண் டெள்ளாமை வேண்டும்”

  கிருமித்தொற்று இருக்குமோ என்று ஐயப்படுகிறவர்களை அரசுகள் ஒதுக்கி வைக்கின்றன. அது quarantine எனப் படுகிறது. இது இத்தாலிய சொல்லாகிய quarantena (40 நாள்) என்பதிலிருந்து பிறந்தது; பிரஞ்சில் quarantaine.

  1721 இல் பிரான்சின் தென் துறைமுகமாகிய மர்சேய் (Marseille) இல் quarantine முதன்முதலாக அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரில் அப்போது பயங்கர Plague நோய் கோரத் தாண்டவமாடி உலகின் மீது படையெடுத்தது.

  அக்காலம் முதல், தொற்று நோயாளிகள் பயணித்த வெளிநாட்டுக் கப்பல்களைத்  துறைமுகத்துள் விடாமல் கடலிலேயே 40 நாள் நங்கூரமிட்டுக் காத்திருக்கச் செய்யும் உலக வழக்கம் தோன்றிற்று.

  அதென்ன கணக்கு 40 நாள்?

  Allopathy யின் தந்தை எனப் போற்றப்படும் Hippocrates (5 ஆம் நூ. பொ.யு.மு.) சில நோய்களுக்கான காலத்தை 40 நாள் என நிர்ணயித்துள்ளாராம்.

&&&&&
படம் உதவி இணையம்


7 comments:

  1. கொரோனா விரைவில் அழிந்தால் சரி...

    ReplyDelete
    Replies
    1. எல்லாருடைய விருப்பமும் அதுவே. உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி.

      Delete
  2. அனைத்து அரசும்
    உணர வேண்டிய முக்கிய விடயம் இது

    யாரேனும் அரசின் கவனத்துக்கோ சுகாதார துறைக்கோ கொண்டு செல்லுங்கள்
    சீனாவின் வழியிலிருந்து விலகி வரலாற்றையும் ஆராய்ந்து அணுகுவோம்

    ReplyDelete
    Replies
    1. வருக ! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  3. சீக்கிரம் அழிய வேண்டும்

    ReplyDelete
  4. வருக ! உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . மேன்மேலும் மக்களைக் கொல்லாமல் கொரோனா விரைவில் அழிய வேண்டும் என்பது அனைவரும் விழைவது.

    ReplyDelete
  5. விழிப்புணர்வு பதிவு
    நன்றி

    ReplyDelete