Saturday 14 July 2012

பராட்டா




கோதுமை விளையாத தமிழகத்தில் சப்பாத்தி , பராட்டா முதலியவற்றை உண்ணும் பழக்கம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் ஏற்படவில்லை.  

சுதந்தரம் கிடைத்தபோது தமிழகம் கொடிய உணவுப் பஞ்சத்தில் சிக்கியது. நெல் விளைச்சல் குன்றியதால் அந்தப் பரிதாப நிலை. பரவலாகப் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. நடுவண் அரசு அந் நெருக்கடியைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகளுள் ஒன்று வட நாட்டுக் கோதுமையை இங்கே அறிமுகப்படுத்திப் பழக்கத்துக்குக் கொணர்ந்தமை. 

தயாரிப்பு அனுபவம் இல்லாமையால் தொடக்கக் கால முரட்டுச் சப்பாத்தியும் பராட்டாவும் சாப்பிட்டோரின் கையையும் பற்களையும் கடுமையாய்ப் பதம் பார்த்தன. 

அவர்கள் பட்ட அவதியை 1951 இல் வெளிவந்த சிங்காரி என்ற திரைப் படத்தின் பாடலொன்று எதிரொலித்தது: 

ஒரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த

உலகினில் ஏது கலாட்டா?

உணவுப் பஞ்சமே வராட்டா - நம்ம

உயிரை வாங்குமா பராட்டா? 

தஞ்சை ராமய்யாதாஸ் இயற்றியது .

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அக்கால நிகழ்வை மிக மிக அழகாக
    பாட்டில் நுழைத்த விதம் மனம் கவர்ந்தது
    அறியாத புதிய தகவல்
    .பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete