Sunday, 1 December 2013

பழைய விளையாட்டுகள் -- கொந்தம்

பழைய  விளையாட்டுகள்  --  (தொடர்ச்சி 1)
                கொந்தம் 
             
  நொண்டிக் கோடு போலவே இதிலும் இரண்டு அணி. பெயர் சூட்டுவோம்: ப அணித அணி.

   ஆடுகளம் ஒரு நீள்சதுரம்அதைச் சரி பாதியாக நீள வாக்கில் பிரிக்கும் ஒரு கோடு. அப்புறம் சம தொலைவில் குறுக்குக் கோடுகள்; எட்டுப் பேர் ஆடுவதற்கு இரு கோடு தேவை. இப்போது களத்தில் ஆறு கட்டங்கள் உள்ளன. 
     நீள் சதுரம் கிழக்கு - மேற்காய் அமைந்திருக்கிறதுமுதல் கோட்டில் ப அணித் தலைவர்மற்ற மூன்று கோடுகள் ஒவ்வொன்றிலும் ஒருவர் என நால்வரும் கிழக்கு நோக்கி நிற்கிறார்கள். எதிரில்வெளியில் நிற்கிற  த அணி அடி படாமல் அல்லது தொடப்படாமல் களத்துள் நுழைந்து கடந்து மேற்குப் பக்கமாய் வெளியேற வேண்டும்.

    உடனே ப அணியினர் திரும்பி மேற்கைப் பார்த்து நிற்பார்கள்;  தலைவர் நான்காம் கோட்டின்மீது நிற்பார்: அதுதானே இப்போது முதல் கோடு?   த அணி மறுபடி களத்தைத் தாண்டிக் கிழக்கே வந்துவிட வேண்டும்.

    தொடக்கத்திலிருந்தே அவர்களைத் தடுக்க ப அணி முயலும்; கையை நீட்டித் தொடலாம்அடிக்கலாம். தொட்டவுடன் அல்லது அடித்தவுடன் அசையாமல் நிற்க வேண்டும்கால்கள் நகரக் கூடாது;   சிறிது நகர்ந்தாலும்,   "பேத்தடி வச்சுட்டான்" (பெயர்த்து அடி வைத்துவிட்டான்) என்று த  அணி ஆட்சேபிக்கும். மண்ணில் பதிந்த கால் சுவட்டைக் கவனித்துபெயர்த்தடியா அல்லவா எனத் தீர்மானிப்பர்பெயர்த்தடி  வைத்தால் தொட்டது செல்லாது.

 (தொடரும்)
------------------------------------------------------------------------------------------------


10 comments:

  1. அருமை... அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . வாழ்த்துக்கும் நன்றி .

      Delete
  2. புதிய தகவல் இது... நன்றி..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  3. Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  4. இது வரை கேள்விப்படாத விளையாட்டு! கொந்தம் என்ற சொல்லுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. கொந்தம் என்றால் என்ன பொருள் எனத் தெரியவில்லை . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  5. கொந்தம் என்னும் இந்த விளையாட்டுப் பற்றி, இதன் பெயரைக் கூட இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. தங்கள் சிறுவயதில் விளையாடிய இவ்விளையாட்டை இத்தனை வருடங்களுக்குப் பிறகு இனிதே நினைவுகூர்ந்து எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி தங்களுக்க.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . பழைய விளையாட்டுகள் பற்றிய ஆவணமாக அமையும் என்று என்னிடம் நேரில் கூறீ எழுதுமாறு கோரிய முனைவர் வேங்கட சுப்புராய நாயகர் இவற்றை வாசித்ததாய்த் தெரியவில்லை . அவருக்கு எழுத்துப் பணி மிகுதி .

      Delete