எஸ். வையாபுரி
பிள்ளை, தம் 'காவிய காலம்' என்னும் நூலின் 86 ஆம் பக்கம் முதல் 119 ஆம் பக்கம்வரை, சிலப்பதிகாரத்தின் காலம் பற்றி ஆராய்ந்துள்ளார்.
அவர் தரும் சான்றுகளுள் நான்கை மட்டும் எடுத்து எழுதுகிறேன்; விரிவஞ்சிப் பிறவற்றை விட்டுவிட்டேன்.
"சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனது தம்பி எனக் கூறப்படுதலால்
செங்குட்டுவன் காலமாகிய கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இக்
காவியம் தோன்றியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, வி. கனகசபை பிள்ளை முதலியோர் கருதுவராயினர்.
சேரன் செங்குட்டுவன் காலமும் சிலப்பதிகாரத்தின் காலமும்
கி. பி. 5 ஆம் நூற்றாண்டு என முதன்முதல் துணிந்து
எழுதியவர் தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்களே; செங்குட்டுவன் காலத்தில்
தோன்றியதே சிலப்பதிகாரம் என்பது இவர்களுக்கும் முற்றும் உடம்பாடே. சம காலம் அன்று என்று
எழுதியவர் கே. வி. சுப்பிரமணிய ஐயர். 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இக் காவியம் தோன்றியிருக்க வேண்டும் என்றனர்
எல். டி. சுவாமிக்கண்ணு பிள்ளை.
காவியத்தின் காலம் பிற்பட்டதுதான்:
1 -- மனுநீதிச் சோழன் கதையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது:
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
( வழக். காதை - 53-55 )
இக் கதை முதல்முறையாக 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட மஹாவம்சத்தில் வருகிறது; ஏலாரா என்ற சிங்கள அரசன் இவ்வாறு செய்தான்
என அந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.
2 -- பல நாட்டினரை இளங்கோ கூறுகிறார்:
கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேல் கட்டியர்
பங்களர், வங்க தேசத்தினர்க்கு 7, 8 ஆம் நூற்றாண்டளவில் சாஸனங்களில் வழங்கும்
பெயர்.
3 -- சங்க காலத்தில் காணப் பெறாத சில தெய்வங்களும்
இந்நூலில் கூறப்பட்டுள்ளன. உதாரணமாகக் கலைமகளாகிய தெய்வத்தைக் கூறலாம்.
நாயன்மார்கள் காலத்தில்தான் (7 ஆம் நூ.) முதல்முதலாக இத் தெய்வத்தைக்
குறித்து வந்துள்ளது:
கலைமகள் தலைமகன் இவனென வருபவன் (சம்பந்தர் 1 -124,3 )
சிலப்பதிகாரத்தில்
ஆய்கலைப் பாவை (12 - 71) எனவும் மாமகளும் நாமகளும் (22
0 இறுதி வெண்பா) எனவும் காண்கிறோம்
4 -- மிகப் பிற்பட்ட காலத்தனவாகிய பல சொற்கள் வந்துள்ளன: இந்த, நான், வார்த்தை, பிற்பாடு, செட்டி, உடைய (6 ஆம் வேற்றுமை உருபு)
இனி, விநாசித்தம்பி செல்வநாயகம் தம், " தமிழிலக்கிய வரலாற்றில்"
எழுதியுள்ளதை அறிவோம்:
"சங்கப் பாக்களில் இல்லாத நான் (தன்மை ஒருமை), நீர் (முன்னிலைப் பன்மை), இந்த (சுட்டு), அன் (எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி: போக்குவன், உறுவன்), கள் விகுதி (உயர்திணைப் பன்மையில்) சிலப்பதிகாரத்தில் பயின்றுள்ளன; இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ள வாழ்க்கை
முறை, பண்பாடு, சமய வழிபாடுகள் பிற்காலத்தவை. இளங்கோவடிகள் காலத்தில் நடந்ததாய்க்
கற்பனை செய்யப்பட்டுள்ளது."
=======================
'சிலப்பதிகாரமும் அதன் ஆசிரியரும்,' http://sgnanasambandan.blogspot.in/2013/10/blog-post.html என்ற தங்கள் கட்டுரையில் சிலப்பதிகாரம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதற்கு வையாபுரி பிள்ளை கூறியிருக்கும் சான்றுகள் சிலவற்றை எழுதும் படிக் கேட்டிருந்தேன். என் வேண்டுகொளுக்கிணங்கி அவற்றுள் சிலவற்றை எடுத்துக் காட்டியிருப்பதற்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அந்த வேண்டுகோள் இன்னொரு கட்டுரை எழுத எனக்கு வாய்ப்பு தந்தமையால் அதற்கும் நன்றி .
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி .
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் மதிப்பு மிக்க வாக்குக்கு மிகுந்த நன்றி .
ReplyDelete