Thursday 3 December 2015

கண்ணதாசன்


    



  இவரது இயற்பெயர் முத்துதத்துப் போன இடத்தில் வைத்த  பெயர்  நாராயணன்எப்படிக் கண்ணதாசன்  ஆனார்? விவரித்திருக்கிறார்தம் சுயசரிதை, 'வனவாசம்', என்னும் நூலில்; அதில் அவர், 'அவன்'  எனத் தம்மைப்  படர்க்கையில்  குறிப்பிடுகிறார்.

    வேலை தேடி ஒரு  பத்திரிகை அதிபரைப் போய்ப் பார்த்தபோது  நடந்த  நிகழ்ச்சி,  பக்கம்  57, 58 இல், இடம்  பெற்றிருக்கிறது:

    "என்ன  பெயரில்  இதுவரை  தை  கட்டுரைகள்  எழுதியிருக்கிறீர்கள்?   என்று அவர்  கேட்டார்.

     சொந்தப்  பெயரைச்  சொல்ல  வந்த  அவன்   கொஞ்சம்  தயங்கினான்புனைபெயருக்குச்  செல்வாக்கு  இருந்த  காலம்  அதுஅதிலும்  தாசன்  என்று  வரும்  புனைபெயருக்கு   மரியாதையே  தனிபாரதிதாசன்கம்பதாசன்சக்திதாசன்காளிதாசன்  என்ற  பெயர்கள்  நாலு  பேருக்குத்  தெரிந்த  பெயர்களாக  விளங்கினஅவன்,  'என்ன  தாசன்என்று  சொல்லலாம்  என்று  யோசித்தான்சில விநாடி யோசனைக்குப்  பின்,  தான்  யோசித்துச்  சொல்வதை   அவர்  அறியாமல்  மறைக்க,  எங்கேயோ  நினைவில்  இருந்தவன்போல,  'என்ன  கேட்கிறீர்கள்?'  என்று  கேட்டான்.

        மீண்டும்  அவர்  பழைய  கேள்வியையே  திருப்பினார்அப்போதே  அவன்  முடிவு  கட்டியபடி, பளிச்சென்று, 'கண்ணதாசன் என்பது  என்  புனைபெயர்' என்றான்; அவரும் அது ஏதோ அறிமுகமான பெயர்போல் 'பார்த்திருக்கிறேன்   பத்திரிகைகளில்என்றார்.

      இதற்குப்  பெயர்தான்   சந்தர்ப்பம்  என்பது!   உண்மையில்  அவர்  அந்தப்  பெயரை  எந்தப் பத்திரிகையிலும்  பார்த்திருக்க  முடியாதுஅந்தப்  பெயரே  இரண்டு  நிமிடங்களுக்கு முன்னால்தான்  பிறந்தது!

 தெரியாததுபோல் காட்டிக்கொள்வது பெரிய மனிதர்களுக்கு   அழகில்லையல்லவாஅவர்  தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டார்அவனும்  சளைத்தானா?  "நீங்கள்  பார்த்திருக்கக்  கூடும்"  என்று   மட்டும்  கூறினான்.

                         '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''       
                      (படம் உதவி: இணையம்)

8 comments:

  1. Replies
    1. சுவைத்துக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    தகவல் மிக சுவாரஸ்யமாக உள்ளது த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சுவைத்துக் கருத்தறிவித்தமைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி .

      Delete
  3. ஐயா வணக்கம்.
    வனவாசமும் மனவாசமும் படித்த காலத்தின் மீள் நினைவு தங்கள் பதிவின் வாயிலாக அமைந்தது.
    தொடர்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நினைவு மலர்வதற்கு என் பதிவு பயன்பட்டது என்பதறிந்து மகிழ்கிறேன் , தொடருங்கள் . மிக்க நன்றி .

      Delete
  4. கண்ணதாசன் பெயர் பிறக்கக் காரணமாயிருந்த நிகழ்வு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. சுவைத்துக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete