Saturday 3 December 2011

விசாரிப்பு - ஒருநிமிடக் கதை



பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக ஊழியர் கோபாலனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு வருவதற்காக மாணிக்கம் தம் மனைவியுடன் சென்றிருந்தார். அலுவலகச் செய்திகள், ஊர் வம்பு, சினிமா, அரசியல் என உற்சாகமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வருகையில் மனைவி கேட்டாள்:

ஏங்க, கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்து போன கதையா, என்னென்னமோ அரட்டை அடிச்சுட்டுக் கடைசியில அவரோட உடம்பைப் பத்தி விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவும் மறந்துட்டீங்களே, அவர் என்ன நினைச்சுக்குவார்?”

மாணிக்கம் சிரித்தவாறே சொன்னார்:

ஒண்ணும் நினைக்க மாட்டான்! சந்தோஷந்தான் படுவான். நான் வேணும்னு தான் அவன் நோயைப் பத்திப் பேசலை. இந்தப் பத்து நாளில் எத்தனை பேரின் கேள்விகளுக்கு உடம்பைப் பத்தி, சிகிச்சை பத்தி சொல்லி சொல்லி அலுத்துப் போயிருப்பான்? அந்த நிலையில் என் பேச்சு, அவனுக்கு நிச்சயம் புத்துணர்வும் தெம்பும் கொடுத்திருக்கும்.

(01/08/2007 ஆனந்த விகடனில் ஒரு நிமிடக்கதை பகுதியில் எழுதியது)

3 comments:

  1. உண்மையான நட்பை அழகாகச் சொல்லும் கதை. நட்பின் புரிதலுணர்வு புலப்பட்ட விதம் அருமை.பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நல்ல கதை.

    உண்மையிலேயே நோயாளிகளுக்குத் தேவை ஆறுதல் மட்டுமல்ல,மனமாறுதலும் கூடத்தான்.

    ReplyDelete
  3. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete