Tuesday 29 May 2012

சொஃபுக்ளீசின் எலெக்த்ரா -1 (ஆங்கில மூலத்திலிருந்து)





( கன்னி எலெக்த்ரா தன்னைத் துன்புறுத்தும் தாயிடம் )



தாயா ! சிறைக் காவலர் என்பது பொருந்தும், 

என்மீது நீதிணிக்கும் அடிமைத் தனத்தையும் 

உன்னிட மிருந்தும் உன்துணைவ ரிடமிருந்தும் 

நான்கேட்க வேண்டியுள்ள வசவுகளையும் நினைத்தால். 

ஏசலாம் என்னை எண்ணப் படியெலாம். 

இழிந்தவள், கொடூரி, நாண மில்லாள், 

இவ்வா றெல்லாம் இருக்கிறேன் என்றால் 

இதுவே சான்று உன்மகள் எனற்கு. 

( என்ற்கு - எனல் + கு = என்பதற்கு )

(படம் உதவி; இணையம்)

1 comment:

  1. தாய்மையின் வியக்கத்தக்கதோர் வடிவத்தைக் காண்கிறேன் இங்கே. தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை என்னும் பழமொழியை நினைவுபடுத்தும் வகையில் மகளின் பேச்சு. ஆணித்தரமான அவள் பேச்சில் அன்னயின் மீதான வெறுப்பு விளங்குகிறது. அருமையான மொழிபெயர்ப்பு. ரசித்துப் படித்தேன். பாராட்டு.

    ReplyDelete