Wednesday 3 July 2013

ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும்


           நம்  முன்னோர்  ஆதார  பூர்வமாய்  வரலாறு  எழுதாமை  ஒரு  பெரிய  குறைதான்;   அது  பரவாயில்லை.    ஆனால்    அவர்களுள்  சிலர்  நெஞ்சாரப்  பொய்  சொல்லி   உண்மையை  அறியவொட்டாமல் குழப்பி விட்டமைதான்   பெருந்  தவறுதொல்காப்பியர்திருவள்ளுவர்இளங்கோகம்பர், ஔவையார்  முதலிய   படைப்பாளர்    பற்பலரைப்  பற்றிய    புளுகு  தகவல்களை  அவர்கள்  எழுதிப்  பரப்பியிருக்கிறார்கள்.
           அவற்றுள்  ஒன்று,   ஒட்டக்கூத்தர் - புகழேந்தி  குறித்த   வதந்திஅவர்கள்  இருவரும்   கைவர்  எனவும்    புகழேந்தியை  ஒட்டக்கூத்தர்  கொடுமைப்படுத்தினார்  எனவும்    விரிவான  கதை    உண்டு.
           ஒட்டக்கூத்தர்  12 ஆம்  நூற்றாண்டுக்காரர்;    புகழேந்தி   13  ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்தவர்.    அவர்கள்  இருவரும்  ஒரே  சமயத்தில்,   ஒரே  இடத்தில்  உறைந்து     பூசலிட்டனர்     என்ற   புனைசுருட்டை  இட்டுக்கட்டியவரும்  பரப்பியவரும்    நேர்மை  அற்றவர்கள்    என்று    குற்றம்  சாற்றுவது  தவறாகாது.

                         ++++++++++++++++++++++++++++++++


4 comments:

  1. கண்டிப்பாக நேர்மை அற்றவர்கள் தான்...

    விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. என் கருத்தை ஆதரித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete

  3. எனக்குப் பல நாட்களாகவே ஒரு சந்தேகம். நம் முன்னோர் ஆதார பூர்வமாய் எழுதாமல் விட்டதற்கு கல்வெட்டு ஆதாரம் தவிர வேறு எதுவும் நிலைத்து நிற்கும்படியானதாக இருக்கவில்லை. ஓலைச் சுவடிகள் எவ்வளவு காலம் அழியாமல் இருக்கும்.?அண்மை வரை நம்முடன் இருந்த பாரதியின் எழுத்துக்களை புத்தக வடிவில் வெளியிடும்போதே பாட பேதம் என்று சில வார்த்தைகளை குறிக்கிறார்கள். இதுவே இப்படி என்றால் பழைய பல இலக்கியங்களிலும்செவிவழிக் கதையாக உள் நுழைப்புகள் பல இருக்கலாம் என்று தோன்றுகிறது.
    “ ஒட்ட்க்கூத்தன் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் “ என்பன போன்றவையே செவி வழிக் கதையாக இருக்கலாம் அல்லவா. புனைசுருட்டு என்பதைவிட அபரிமிதமான கற்பனை வளம் என்று கொள்ளலாமோ.?

    ReplyDelete
  4. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வது சரிதான் . செவி வழிக்கதைகள் , பழைய இலக்கியங்களில் இடைச்செருகல் முதலியவை உண்டு . ஒட்டக்கூத்தர் பற்றிய கதை அவரை இழிவுபடுத்துவதற்காக் கட்டிவிடப்பட்டது. அவர் கம்பனைப் போன்றே கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றவர் . பிறரைக் கேவலப்படுத்துவதற்காக எழுதியதைக் கற்பனைவளம் என்று போற்றக்கூடாது . அவதூறு என்னும் குற்றம் என்றே அதைக் கொள்ள வேண்டும்..

    ReplyDelete