Monday 28 October 2013

மருச் சொற்கள்


தமிழில் சில சொற்கள் காலப் போக்கில் தம் உருவத்தில் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றை மருச் சொற்கள் என்கிறோம். கீழ்க் காணும் பட்டியல் அவற்றுள் சிலவற்றை எடுத்துக்காட்டும்:

நேயம் - நேசம்.     
தொகுப்பு - தோப்பு.  
பண்டி - வண்டி.
வாயில் - வாசல்.    
இரும்பொன் - இரும்பு. 
அரிக்கும் சட்டி - அரிக்கன்சட்டி.

பெருமகன் என்னும் ஆண்பாற் சொல் பெருமான் எனவும் பெருமகள் என்ற பெண்பாற் சொல் பெருமாள் எனவும் சுருங்கின;   இந்த வார்த்தை பிற்காலத்தில் ஆணாகிய திருமாலைச் சுட்டவேபெண்பாலுக்கு வேறு சொல் படைத்தனர்: அது பெருமாட்டி.

காலப் போக்கில்பெருமான்பிரான் ஆயிற்றுபெருமாட்டிபிராட்டி ஆகியது.

பெருமகன் - பெருமான் - பிரான்.   
பெருமகள் - பெருமாட்டி - பிராட்டி.

                    ++++++++++++++++++++++



10 comments:

  1. வணக்கம்
    ஐயா

    விளக்கம் அருமை மேலும் தொடர....எனது வாழ்த்துக்கள் .....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . மேலும் தொடர முயல்வேன் .

      Delete
  2. அருமையான விளக்கங்கள் ஐயா.
    மூலச் சொற்களைத்தெரிந்து கொள்வதில் தனி மகிழ்ச்சியே ஏற்படுகிறது ஐயா.
    தொடருங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி . தொடர முயல்வேன் .

      Delete
  3. நல்ல விளக்கம் ஐயா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நன்றிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .

      Delete
  4. மருச்சொற்கள் பற்றி அறிந்துகொண்டேன். இரும்பொன் இரும்பானதும், பண்டி வண்டியானதும் புதிய தகவல்கள். பிரான், பிராட்டியின் மூலச்சொற்கள் அறிந்து வியந்தேன். மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரியின் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  5. கோயில் அல்லது கோவில்------ நாகஸ்வரம் அல்லது நாதஸ்வரம்....... விநாயகர் அல்லது வினாயகர் .......பத்திரிக்கை அல்லது பத்திரிகை...... அதேபோல் எழுத்துக்கள் அல்லது எழுத்துகள் ...வாழ்த்துக்கள் அல்லது வாழ்த்துகள் இவையெல்லாம் எனக்கு இருக்கும் சந்தேகங்கள். தெளிவித்தால் கடமைப் பட்டிருப்பேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயங்கள் கேட்டமைக்கு மிக்க நன்றி . கோவில் என்பதுதான் இலக்கண விதிப்படி அமைந்த சொல் ; ஆனால் காலப் போக்கில் " கோயில் " எனத் தமிழறிஞர்களே எழுதவே , இந்தச் சொல்லையும் " இலக்கணப்போலி " என்று பெயர் தந்து இலக்கண நூல் ஏற்றுக்கொண்டது . ஆகையால் இரு விதமாகவும் எழுதலாம் . -- நாதம் என்பது " இனிய ஒலி " ; அதை வழங்குகிற கருவி " நாதஸ்வரம் "; இது மருவி " நாகஸ்வரம் " ஆகிவிட்டது ; இந்தச் சொல்லையும் அறிஞர் பயன்படுத்துகின்றனர் . -- விநாயகன் என்பது வடமொழி ; தலைவன் என்று அர்த்தம் . வி - நாயகன் என்றால் தனக்கு மேல் வேறு தலைவன் இல்லாதவன் என்று பொருள் . அதாவது எல்லாக் கடவுள்களுக்கும் மேலான் கடவுள் . வினாயகன் என எழுதுவது பிழை . பத்ரிக்கா என்ற சமற்கிருதச் சொல் " தாள் " எனப் பொருள்படும் . அதைத் தமிழில் இரண்டு விதமாகவும் எழுதலாம் . -- எழுத்துக்கள் , வாழ்த்துக்கள் , கருத்துக்கள் எனவும் எழுத்துகள் , வாழ்த்துகள் , கருத்துகள் எனவும் அறிஞர்கள் இரு விதமாக எழுதுகிறார்கள் . " க் " இல்லாமல் எழுதினால் ஓர் எழுத்து மிச்சம் .

      Delete